×

களஸ்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள் !!

மனித உறவுகளில் எவர் பிரிந்து சென்றாலும் நம் உயிர் பிரியும் வரை நம்முடன் இருக்கும் உறவாக இருப்பது கணவன் மனைவி உறவாகும். திருமண வாழ்வு சிறப்பான ஒரு அனுபவம் என்றாலும் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் திருமணம் சீக்கிரம் ஆவதில் பல தடை, தாமதங்கள் உண்டாகின்றன. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது இவற்றை தோஷங்கள் என்று வகைப்படுத்துகின்றனர். அதில் ஒன்றான களத்திர தோஷம் பற்றியும் அதனை போக்குவதற்கான பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் அவரது லக்னத்துக்கு 7 ஆம் வீட்டிற்குரிய கிரகம் 3 ஆம் வீட்டில் வருமேயானால் களஸ்திர தோஷம் ஏற்படுகிறது. அதேபோல லக்னத்துக்கு 7 க்குடைய கிரகம் 5 ஆம் வீட்டிற்கு வந்தாலும் களத்திர தோஷம் உண்டாகிறது. லக்னத்துக்கு 10 ஆம் வீட்டிற்குரிய கிரகம் 7 ஆம் வீட்டிற்கு வந்தாலும் களஸ்திர தோஷமாகும். மேற்கண்ட தோஷம் ஆண் – பெண் இருவருக்கும் ஏற்படுகிறது. இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைபடுதல், தாமதப்படுதல் ஏற்படுகிறது. இந்த தோஷத்தை கீழ்க்கண்ட எளிய பரிகாரங்கள் மூலம் போக்கி சிறப்பான திருமண வாழ்வு அமைய பெறலாம்.

 வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்கு செவ்வாய்கிழமையில் சென்று கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்குவதற்கான வழிபாடு, பூஜை செய்ய ஏற்பாடு செய்து வழிபட வேண்டும். முருகன் சந்நிதியில் கொடுக்கபட்ட பிரசாதமான தீருநீறு மற்றும் குங்குமத்தை பூஜை அறையில் வைத்து வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்த 90 வது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி விடும். திருமணம் சிறப்பாக நடந்து நீண்ட ஆயுளுடன் வாழ்வர். திருமணத்திற்கு பிறகு தம்பதி சகிதம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும்.

ஒன்பது செம்பருத்தி பூக்கள், ஒரு சிவப்புநிற ஜாக்கெட் துணி, 27 கொண்டைக் கடலைகள் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். ஒரு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை பசுமாட்டு கோமியம் தெளித்து சுத்தம் செய்த பின், சிவப்பு ஜாக்கெட் துணியில் செம்பருத்திப்பூ மற்றும் 27 கொண்டைக்கடலைகளை வைத்துகட்டி, பூஜை அறையில் வைக்க வேண்டும். மஞ்சள் துணியில் தங்களது குலதெய்வத்திற்குத் தனியே காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். பகல் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதமிருந்து மாலையில் யாரும் பார்க்காதவாறு அந்த முடிச்சை எடுத்துச்சென்று தெப்பகுளம், கண்மாய், ஆற்றுபடுக்கை போன்ற நீர்நிலைகளில் போட்டு விட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் களஸ்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

Tags :
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!